கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை மீண்டும் வட கொரியா நடத்தியமைக்கு தமது கண்டனத்தை பாக்கிஸ்தான் இன்று வெளியிட்டுள்ளது.
இப்படியான செயல்பாடுகள் மூலம் பிராந்தியத்தில் மட்டுமல்லாமல் பிராந்தியத்திற்கு அப்பாலும் பதற்ற நிலையை ஏற்படுத்தும் என பாக்கிஸ்தானிய வெளிநாட்டுத்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் சாசனத்திற்கு எதிரானது என தெரிவித்துள்ளதுடன், கொரிய குடா மற்றும் வட கிழக்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மையினையும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை அமெரிக்காவில் உள்ள நகரங்கள் வரை செல்லக்கூடிய வலுவை கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் வடகொரியா 18 ஏவுகணைகளை பிரயோகித்து 12 சோதனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.