காபூலில் உள்ள ஈராக்கிய தூதுவராலயத்தில் தற்கொலை தாக்குதல்

1416 14

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈராக்கிய தூதுவராலயம் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்கு தற்கொலை குண்டுதாரிகள் ஈராக்கிய தூதுவராலயத்தை குறிவைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தூதுவராலயத்தின் பிரதான வாசலில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் வெடிக்கவைத்துள்ள அதேவேளை, ஏனைய மூவரும் தூதுவராலயத்தினுள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எப்படியிருப்பினும், தூதுவராலய பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தம்மால் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர்.

தலைநகர் காபூலில் இதற்கு முன்னரும் பல முறை ஐ.எஸ். மற்றும் தாலிபான்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, இந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியினுள் மட்டும் ஆப்கானிஸ்தானில் ஆயிரத்து 662 பொது மக்கள் கொல்லப்;பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 20 சதவீதமான மரணங்கள் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment