நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே, ஒகஸ்ட் மாதம் 8ம் திகதி முதல் 25ம் திகதி வரையில் வெளிநாட்டுக்கு சென்றுத்திரும்ப கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.
இதன்படி நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரின் கடவுச் சீட்டு, 10 லட்சம் ரூபாய் பெறுமதியான மேலதிக இரண்டு சரீர பிணைகளில் அவரிடம் திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற உத்தரவை மின்னஞ்சல் ஊடாக குடிவரவுப் குடிப்பெயர்வு திணைக்களத்துக்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
29 லட்சம் ரூபாய் நிதி மோசடியுடன் அவர் தொடர்பு படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் வெளிநாட்டுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.