முறையற்றவிதத்தில் ஈட்டிய பணத்தைக் கொண்டு தெஹிவளை – மகிந்து மாவத்தையில் யோசித்தராஜபக்ஸ கொள்வனவு செய்ததாக கூறப்படும் வீட்டின் மூலஉறுதியை முன்வைக்குமாறு, நிதிமுறைக்கேட்டு விசாரணைக் காவற்துறைப் பிரிவிற்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது யோசித்தராஜபக்ஸவும் முன்னிலையானார்.
இதன்போது குறித்த வீட்டின் மூலஉறுதி வழங்கப்படவில்லை என்று விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
எனினும் அது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக பிரதிவாதியின் சட்டத்தரணியால் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.