குவைட்டில் இன்னல்களுக்கு உள்ளான இலங்கைப் பணிப்பெண்கள்

302 0

குவைட்டில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 26 இலங்கைப் பணிப்பெண்கள் இன்று நாடுதிரும்பினர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையின் தலையீட்டின் அடிப்படையில் அவர்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டு வந்தனர்.

இவ்வாறு நாடுதிரும்பியவர்கள் அனைவரும் வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குவைட்டில் உள்ள இலங்கைத் தூதுரக அலுவலகத்திலும் ஏனைய முகாம்களிலும் இன்னும் 121 இலங்கைப் பெண்கள் அநாதரவான நிலையில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a comment