யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் கவனயீர்ப்பு பேரணியில்

442 0

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணிகளை நடத்தினர்.

காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் ஆகியோர் இருமாவட்டங்களிலும் முன்னெடுத்து வரும் நீண்ட போராட்டங்களுக்கு ஆதரவைப் வெளிப்படுத்தி, இந்த பேரணிகள் நடத்தப்பட்டன.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பமான பேரணி, ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரையில் சென்றது.

பின்னர் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கையளித்தனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் இராயப்பர் ஆலயத்துக்கு முன்னால் காலை 10 மணிஅளவில் ஆரம்பமான பேரணி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் வரையில் சென்றது.

அங்கும் ஜனாதிபதிக்கான கோரிக்கை மனு ஒன்று அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Leave a comment