கோப்பாய் தாக்குதலின் பிரதான சந்தேக நபர் முன்னாள் போராளி – காவல்மா அதிபர் தகவல்

21079 178

யாழ்ப்பாணம் – கோப்பாயில், காவல்துறை அலுவலகர் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதான சந்தேக நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்த தகவலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை வழிநடத்தியவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரும், ஆவா குழுவின் உறுப்பினரும் ஆவார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு, முப்படைகளைப் பயன்படுத்துமாறு, அரசாங்கத்தின் தலைவர்கள் தமக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டமை, பின்னர் காவற்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை போன்றவிடயங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாயில் வைத்து இரண்டு காவற்துறை அலுவலர்கள் தாக்கப்பட்ட நிலையில் அவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு இன்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகளை கண்காணிப்பதற்காக காவற்துறை மா அதிபர் அங்கு சென்றிருந்தார்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த காவற்துறையினரை அவர் சந்தித்திருந்தார்.

பின்னர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருந்ததுடன், கூட்டத்துக்கு வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனும் வருகைத் தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காவற்துறையினர் மீதான தாக்குதல் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்புகளில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைசர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சினால் தற்போது விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், வடக்கில் சேவையில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாக பிவித்துரு ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காவல்துறையினர் தங்களின் பாதுகாப்புக்கேனும் துப்பாக்கியை பயன்படுத்த முடியாத நிலை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார

Leave a comment