ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் ஏற்படவிருந்த பாரிய ஆபத்தான சம்பவம் ஒன்று வாநூர்தி உழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட உடன் நடவடிக்கை காரணமாக தடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று பயணித்த ஸ்ரீலங்கன் யூ.எல்.166 வாநூர்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயணியின் பொதியில் இருந்து வெளிப்பட்ட புகையினை அவதானித்த வாநூர்தி ஊழியர்கள் அதனை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
கையடக்க தொலைபேசியின் உலோக மின்கலம், தீப்பற்றியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.