தேர்தல் வரும் போது இனவாதத்தையும் பிரிவானை வாதத்தையும் தூண்டி விடும் கலாசாரமொன்று இலங்கையில் அண்மைக்காலமாக தோற்றம் பெற்று வருவது இலங்கையின் அரசியல் கலாசாரத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இந்தக்கருத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் வருவதற்கான சாத்தியப்பாடுகள் நெருங்கும் போது இந்த பாகுபாடுகள் வெளியிடப்படுகின்றன.
இன்று காலை திருகோணமலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த காலத்திலும் தற்போதும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தமது அரசியலுக்காக இனங்களிடையே வீண் அச்சங்களையும் சந்தேகங்களையும் உண்டாக்கியுள்ளனர்.
ஆகவே சிறுபான்மை மக்கள், எப்போதும் இனவாத மதவாத போக்கிற்கு எதிரானவர்கள் என்பதை தமிழ் முஸ்லிம் மக்கள் உணர்த்த வேண்டும் என்றும் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.