நளினியின் விடுமுறைக் கோரிய மனு மீண்டும் ஒத்திவைப்பு

469 0

இந்திய முன்னாள் பிரதமர் ரஜிவ்காந்தி கொலை வழக்கில் 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகனின் விடுமுறைக் கோரிய மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வசிக்கும் தமது மகளின் திருமண ஏற்பாட்டுக்காக ஆறு மாதகால விடுமுறையை வழங்குமாறு நளினி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அன்றையதினம் நளினிக்கு விடுமுறை வழங்கலாமா? கூடாதா? என்பது குறித்த தமிழக அரசாங்கம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் தங்களின் நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துமாறும் சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இந்த வழக்கில் சிறையில் உள்ள முருகன், தமக்கு ஜுவசமாதி அடைய அனுமதிக்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment