அவரது சட்டத்தரணி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சாமரி லியனகே என்று குறித்தப் பெண் வைத்தியர், 2014ஆம் ஆண்டு தினேந்திரா அத்துகோரல என்ற தமது கணவனை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் அவர் சிறையில் இருந்து விடுகைப் பெற்ற நிலையில், அவரது குடியுரிமையையும் மீள வழங்க அவுஸ்திரேலிய மீள்குடியேற்றத் திணைக்களம் இணங்கி இருந்தது.
இந்தநிலையில் சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிகோரியும் தண்டனையை குறைக்கக் கோரியும் அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் அவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.