மலையக மக்களை இழிவாக பேசி பேஸ்புக்கில் காணொளி ஒன்றை பதிவு செய்திருந்தவர் தொடர்பில் நுவரெலியா மாவட்ட பிரதி காவற்துறை மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி ராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஸ்ணன் தலைமையிலான குழு ஒன்று இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக பெண்களையும், பண்பாடுகளையும் இழிவுப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, ஜேர்மனியைச் சேர்ந்த குறித்த நபர் காணொளி ஒன்றை பதிவேற்றி இருந்தார்.
இது சமுகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.