கண்டி- கொழும்பு பிரதான வீதியில் கேகாலை, பல்லபான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் அதிசொகுசு பஸ் வண்டி தீப்பிடித்துள்ளது.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ் வண்டியே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதிய பஸ் வண்டி சற்று நேரத்தில் தீப்பிடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.