புதிய அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ள அதிகாரங்கள் தொடர்பில் சம்பந்தன்

299 0
புதிய அரசியல் யாப்பில் காணி மற்றும் பிராந்திய காவற்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை  கூறியுள்ளார்.
இதன்படி தேசிய பொருளாதாரம் மற்றும் வெளியுறவு, தேசிய காவற்துறை உள்ளிட்ட விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கும்.
மாகாண சபைகளின் கீழ் காணி, பிராந்திய காவற்துறை, மீள்குடியேற்றம் போன்ற மக்களின் அடிப்படைத்தேவைகள் சார்ந்த அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும்.
அத்துடன் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அதிக அதிகாரங்கள் பகிரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment