கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
லிங்கநாதன் மகேந்திரராஜா என்ற இலங்கையர் மீது, சட்ட விரோதமாக தடுத்து வைத்தல், ஆயுத பாவனை, தாக்குதல் உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்து நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி அவருக்கான தண்டனையை கனடாவின் உயர் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.
இதன்போது குறைந்த பட்சம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.