இலங்கை மருத்துவர், விடுதலைக்கு விண்ணப்பிக்கவில்லை

510 0

aus-doctorஅவுஸ்திரேலியாவில் தமது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கையை பிறப்பிடமாகக்கொண்ட பெண் மருத்துவர், குறுகிய கால விடுமுறைக்கு விண்ணப்பிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தக்கொள்ள முடியாத நிலையில் தினேந்திரா அத்துகோரளை என்ற தமது கணவரை கொலை செய்தமை தொடர்பில் சாமரி லியனகே என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார்
இதன்பின்னர் குற்றவாளியாக காணப்பட்ட அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து குறுகிய கால விடுமுறைக்கு விண்ணப்பித்தால், தாம் குடிவரவு தடுப்பு முகாமுக்கு செல்லவேண்டி வரும் என்பதால் அவர் அதனை மேற்கொள்ளவில்லை என்று அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் விடுதலைப்பெற்றால்,  அவரின் எதிர்காலம் தொடர்பில் நிச்சயமற்றநிலை உள்ளமையால் விடுதலைக்கும் அவர் விண்ணப்பிக்கவி;ல்லை என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.