வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு கல்வீடு, தமிழர்களுக்கு மட்டும் பொருத்துவீடு – சாள்ஸ் நிர்மலநாதன்!

342 0

வடக்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு கல்வீடுகளும், தமிழ் மக்களுக்கு மாத்திரம் பொருத்துவீடுகளும் வழங்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கில் வழங்கப்படும் 6000 பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பாக மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.

வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகள் அனைத்தும் கல்வீடுகளாகக் காணப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு மட்டும் பொருத்து வீடுகள் வழங்கப்படுகின்றது. அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளில்லையா?

தமிழ்மக்கள் அவர்களது கலாச்சாரத்துடன் வாழ்வதற்கு கல்வீடுகளே பொருத்தமானவை.

அத்துடன், அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் ஏன் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் பொருத்து வீடுகளை வழங்குகின்றீர்கள், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு கல்வீடுகளை வழங்குகின்றீர்கள்? நீங்கள் வீட்டுத்திட்டம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது எங்கள் மக்களுக்கு மிகவும் வேதனையளிக்கின்றது. இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment