இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் கட்டப்பட்ட அதி சக்திவாய்ந்த தொழில்நுட்ப திறன்வாய்ந்த கடல் கண்காணிப்பு கப்பலானது இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
அண்மையில் குறித்த கப்பலானது இந்தியாவினால் இலங்கைக்கு கையளிக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு குறித்த கப்பலை நிர்மாணிப்பதற்காக ஒப்பந்தம் இலங்கையால் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த கப்பலானது அதி சக்தி வாய்ந்ததாகவும், தொழிநுட்ப திறன் கொண்டுள்ள நிலையில், இலங்கையின் கடல் கண்காணிப்பு மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் மற்றும் அனர்த்த நிலைமைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.