அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் சீர்த்திருத்தம் சிறுபான்மை சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமையப்பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா விடுத்துள்ளார்.
தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்படுகின்ற போது சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் வகையில் அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகின்ற வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் அமையப்பெறவுள்ள புதிய அரசியலமைப்பு சகல பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா கோரியுள்ளார்.