ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கு, 8 வருடங்களின் பின்னர் நேற்று விசாரணைக்கு

411 0

Jayaraj-250_06042008படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கு, 8 வருடங்களின் பின்னர் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கம்பஹா மேல் நிதிமன்ற நீதிபதி கேமா சுவர்ணாதிபதி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,  ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஹெக்டர் தர்மரத்ன முதல் சாட்சியத்தை வழங்கினார்.

இந்நிலையில், செல்வராஜா பிரபாகரன், முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் தம்பையா பிரசாத் ஆகியோருக்கு எதிராக குற்றப் பத்திகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணைகளை நீதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கம்பஹா வெலிவேரிய பகுதியில் உள்ள, வெலிவேரிய காந்தி விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதியன்று காலை 7.40க்கு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதுடன் 96 பேர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.