இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள சகல அழுத்தங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவிற்கு வந்துவிடும் என்றும், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்துடன் சர்வதேச கடிவாளத்திலிருந்து இலங்கை விடுபடும் என்றும், அமைச்சர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் நோக்கில் தேசிய அரசாங்கம் சிந்தித்து, அவதானத்துடன் முன்னேறிச் செல்லும் நிலையில், வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளும், அவர் முன்வைக்கும் கருத்துக்களும் மிகவும் பாரதூரமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
வடக்கு-கிழக்கு இணைப்பு மற்றும் சர்வதேச விசாரணை அவசியம் என வடமாகாண முதலமைச்சர் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.