
மஹிந்த ராஜபக்சவை மக்கள் ஜனநாயக வழியில் இரண்டு முறை நிராகரித்துள்ளனர்.
இந்தநிலையில் அவருடைய கூட்டு எதிர்க்கட்சியினால் எவ்வாறு அரசாங்கத்தை தோற்கடிக்கமுடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பப்போவதாக இன்று காலை நாடாளுமன்றில் வைத்து குறிப்பிட்டார்.
இதனை சுட்டிக்காட்டிய சம்பந்தன் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சம்பந்தன் குற்றம் சுமத்தினார்.
எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் என்ற அடிப்படையில் நடைமுறை அரசாங்கம், உரிய ஆட்சியை நடத்தவேண்டும் என்றும் சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.