துருக்கியின் ஜனாதிபதி ஏர்டோகன் ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
அவர் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீளமைத்துக் கொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் ரஷ்யாவின் விமானம் ஒன்றை சிரிய எல்லையில் வைத்து துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனை சீர்செய்வதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ஏர்டோகன் மேற்கொண்டு வருகிறார்.
துருக்கியில் இடம்பெற்ற ஆட்சிப் கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்த பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.