அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டங்கள் அவசிப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஐ_புல் றகுமான் இதனை தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகமாக ஸ்ரீகோத்தாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மஹிந்த அரசாங்கம் 10 ஆயிரம் பில்லியன் கடன் பெற்றுள்ளது.
வருடாந்தம் 100 பில்லியன் ரூபாய்கள் கடனாக செலுத்தப்பட வேண்டியுள்ளது.
இதனால் வரியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் இதுதொடர்பில் காத்திரமான புதிய வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.