விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் கடந்த 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நேற்று நீக்கியது. இந்நிலையில், விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை இந்திய அரசும் நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
மேலும், விடுதலை புலிகள் மீதான தடை நீக்கத்தால் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று வைகோ கூறினார்.ஐரோப்பிய யூனியனின் இந்த தீர்ப்புக்கு தமிழக தலைவர்கள், மு.க.ஸ்டாலின், நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.