கொலன்னாவை களஞ்சியசாலை வளாகத்தில் பதற்றநிலை

249 0

 

கொலன்னாவை களஞ்சியசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அங்கிருந்து அகற்ற காவற்துறையினர் முயற்சித்ததையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது அமைதியற்ற முறையில் செயற்பட்டமை தொடர்பில் 16 பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் காவற்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே கைதான தொழிற்சங்க தலைவர் உள்ளிட்ட 16 பேரிடமும் வெலிக்கடை காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்ததாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எரிபொருள் விவகாரம் தொடர்பில் எதிரணியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரியவால் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.

இதனிடையே கனியவள தொழிற்சங்க ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நாட்டின் முக்கிய சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

Leave a comment