நாட்டில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என டெங்கு நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மீண்டும் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு அழிப்பதற்கு புகை விசுறும்போதுஇ தமது வீட்டின் கதவுஇ ஜன்னல்களை திறந்து வைத்துஇ அந்தப் புகை வீட்டுக்குள் செல்ல மக்கள் இடமேற்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.
இந்த விடயம் தொடர்பில் அறியாத சிலர்இ புகை விசுறும்போது தமது வீட்டின் கதவுஇ மற்றும் ஜன்னல்களை மூடி வைத்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயேஇ பொதுமக்களுக்கான அறிவிப்பு விடுக்கப்படுவதாக டெங்கு நோய் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.