தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு 396 பேரும், 2015ஆம் ஆண்டு 452 பேரும், 2016ஆம் ஆண்டு 852 பேரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் நாடு திரும்பி இருந்தனர்.
நேற்றையதினம், வேலுர் முகாமில் இருந்து 57 அகதிகள் நாடு திரும்பியதுடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 809 பேர் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் 3,04269 பேர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றிருப்பதுடன், அவர்களில் 62,629 பேர் 107 முகாம்களிலும், 36,794 பேர் முகாம்களுக்கு வெளியில் பல்வேறு பகுதிகளிலும் தற்போதும் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நாளையதினம் 36 பேர் தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பவிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.