புட்டிப்பால் புரைக்கேறி ஆறு மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு – வந்தாறுமூலை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான கிருபாகரன் அஸ்வின் என்ற குழந்தையே இதன்போது உயிரிழந்துள்ளது.
புட்டிப்பால் புரைக்கேறி சுவாசக்குழாய்க்குச் சென்றதனால் மூச்சுத்திணறி சுவாசம் தடைப்பட்டதன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதென செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.