தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பிரதமரின் அழைப்பின் பேரில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு ஒன்று இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காணிவிடுவிப்பு மற்றும் காணாமல்போனோர் விவகாரம் என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.