இந்தியாவின் க்றிஸ் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மேலும் 40 மில்லியன் ரூபாய் மோசடி குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள.
இது தொடர்பில் முன்னாள் சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் நாலக கொடஹேவா உள்ளிட்ட நான்கு பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்தில் இந்த நிறுவனத்துக்கான காணியை வழங்குவதற்காக இந்த நிதி மோசடி செய்யப்பட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த நிறுவனத்தின் ஊடாக நாமல் ராஜபக்ஷ 70 மில்லியன் ரூபாய்களை மோசடி செய்து, கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.