இலங்கை சூரை மீன்களுக்கு சர்வதேச சந்தையில் அதிகரித்த கிராக்கி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடித்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஒரு கிலோ சூரை மீன் சர்வதேச சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்வரையில் விற்பனையாவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூரை மீன்பிடித்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.