அகதிகளை குடியேற்ற அந்தநாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் மறுத்துள்ளார்.

275 0

நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்ற தீர்மானித்திருப்பதாக வெளியான தகவலை அந்தநாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் மறுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அலுவலகத்தின் உயர்ஸ்தானிகர் ஃபிலிப்போ க்ராண்டி விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த முகாம்களில் உள்ள 1250 அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்பட்டதன் பின்னர், எஞ்சியுள்ளவர்களுள் ஒஸ்ட்ரேலியாவில் நெருங்கிய உறவர்களைக் கொண்டவர்கள் அந்த நாட்டில் குடியேற்றப்பட வேண்டும்.

இதன்படி ‘அகதிகளை ஒஸ்ட்ரேலியாவில் குடியேற்றுவதில்லை’ என்ற நான்கு வருடங்கள் பழையான கடுமையாக கொள்கையை அவுஸ்திரேலியா மறுபரிசீலனை செய்ய தீர்மானித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆனால் இதனை வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் மறுத்துள்ளதுடன், அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment