அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால், அவரே அமெரிக்க வரலாற்றில் மிகவும் பொறுப்பற்ற ஜனாதிபதியாக இருப்பார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு கட்சியைச் சேர்ந்த 50 பாதுகாப்பு நிபுணர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவான சீ.ஐ.ஏயின் முன்னாள் பணிப்பாளர் மைக்கல் ஹடன் உள்ளிட்டவர்கள் இது தொடர்பான திறந்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் சிறந்த மனோபாவம், பெறுமதி மற்றும் அனுபவம் இல்லாதவர் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இந்த கடிதத்தை எழுதியவர்கள் தோல்விக் கண்ட முன்னாள் தலைவர்கள் என்று கூறியுள்ளார்.