இந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்திற்கான பாதைக்கு வழிவகுக்கும் ஒளிவிளக்காக அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதிய ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டள்ளார்.
இன்றை தினம் பதவியேற்கவுள்ள இந்திய ஜனாதிபதிக்கு நல்வாழ்த்தொன்றை அனுப்பிவைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் மதம் மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட இருதரப்பு உறவுகள் புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் மேலும் வலுவடையும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் அந்நியோன்னியமாக செயற்படுவதில் முன்னெடுத்துவரும் பணியில் புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.