மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த ஆணைக்குழுவின் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது அச்சிடப்படுவதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முத்திராதிபதி லங்கானி லியனகே தெரிவித்தார்