வறட்சி காரணமாக 16 மாவட்ட மக்கள் பாதிப்பு

264 0

கடும் வறட்சி காரணமாக 16 மாவட்டங்களில் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3 இலட்சத்து 3 ஆயிரத்து 748 குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 55 ஆயிரத்து 455 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மாவட்டத்திலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் புத்தளம், திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை, அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் வறட்சி பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 301 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 114 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு மரணவீரதம் 0.3 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment