எழுதாரகை இன்று அரசதிபரிடம் கையளிப்பு

324 0
எழுவைதீவு  குறிகட்டுவான் இடையேயான போக்குவரத்திற்காக 140 மில்லியன் ரூபா செலவில் புதிதாக  கட்டப்பட்ட எழுதாரகை படகு  இன்றைய தினம் உத்தியோக பூர்வதாக கையளிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
எழுவைதீவு  குறிகட்டுவான் இடையேயான போக்குவரத்திற்காக 140 மில்லியன் ரூபா செலவில் புதிதாக  கட்டப்பட்ட எழுதாரகை படகு  இன்றைய தினம் உத்தியோக பூர்வதாக கையளிக்கப்படவுள்ளது. அதாவது மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் 140 மில்லியன் ரூபா செலவில் குறித்த படகு புதிதாக கட்டப்பட்டது. குறித்த படகு கட்டுமானம் கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தில் கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்று இன்றைய தினம் கொழும்பில் வைத்து எம்மிடம் கையளிக்கப்படும்.
இவ்வாறு கட்டப்பட்டுள்ள புதிய படகில் பாதுகாப்பான பயணத்தில் 40 பயணிகளுடன் அவர்களின் பொதியினையும் எடுத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதேநேரம் இவ்வாறு கொழும்பில் கையளிக்கப்படும் படகு விரைவில் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு தனது பணியை ஆரம்பிக்கும். குறித்த படகு தனது சேவையை ஆரம்பிக்கும் பட்சத்தில் இத்தனை ஆண்டுகளாக எழுவை தீவு மக்கள் எதிர்கொண்ட பாரிய பிரச்சணைக்கு தீர்வு கிட்டும் என்றார்.

Leave a comment