ஆயிரம் கிலோ அரிசி வழங்கல்

257 0
வாழ்வோம் வளம் பெறுவோம் 13ம் கட்டத்தில் ஆயிரம் கிலோ அரிசி வழங்கல். பங்களித்தனர் புலம்பெயர் அன்பர்கள்.
 வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் பதின்மூன்றாம் கட்டமானது கடந்த 2017.07.22 ஆம் நாளன்று அவரது மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றது.
புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்பட்ட குறித்த செயற்றிட்டத்தின் பதின்மூன்றாம் கட்டத்தில் தாயகத்தை சேர்ந்த ஐம்பத்து ஏழு குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறுங்காலவாழ்வுடைமை ஊக்குவிப்பினை நோக்காகக்கொண்டு நாளாந்த உணவுத்தேவைக்கு இடர்படும் குடும்பங்களுக்கான ஒத்துழைப்பாக வாழ்வோம்-வளம்பெறுவோம் என்ற செயற்றிட்டமானது வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
புலம்பெயர்ந்து வாழும் அன்பர்களின் பணப்பங்களிப்பில் இன்று நடைபெற்று முடிந்த பதின்மூன்றாம் கட்டத்துடன் இதுவரையில் நானூற்று தொண்ணூற்று மூன்று குடும்பங்களை உள்ளீர்த்திருப்பதாக துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து வாழும் குபேரன்-சைலேந்திரி குடும்பம் மற்றும் திரு. நபில் சுமார் அவர்களின் பங்களிப்பில் வாழ்வோம்பெறுவோம் செயற்றிட்டத்தின் பதின்மூன்றாம்   கட்டத்தில் எண்பத்தொன்பதாயிரத்து ஐந்நூறு ரூபாய் பெறுமதியில் தமிழ் உறவுகளுக்கு இவ்வுதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த இவ்வுதவிகளாக ஐம்பத்து நான்கு குடும்பங்களுக்கு ஆயிரம் கிலோ அரிசியும் இருதய நோயுற்ற இரண்டு பிள்ளைகளுக்கு மருத்துவ ஆய்வுக்காகவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் வறுமையில் உள்ள மாணவன் ஒருவருக்கு பயிற்சி நூல்கள் வாங்குவதற்காகவும் மொத்தமாக பதினோராயிரத்து நானூறு ரூபாய்  பணமாகவும் வழங்கப்பட்டது.  குறித்த இவ்வுதவிகள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் அவரது  மக்கள் தொடர்பகத்தில் வைத்து  வழங்கப்பட்டது.

Leave a comment