மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மெழுகு சிலை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து ராமேசுவரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மெழுகு சிலை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உருவாக்கப்பட்டது. அந்த சிலை ஜெய்ப்பூர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்துல் கலாமின் குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று அந்த சிலையை ராமேசுவரத்துக்கு அனுப்பி உள்ளனர்.
இது குறித்து அருங்காட்சியக நிறுவனரும், இயக்குனருமான அனூப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், சுஷாந்தா ராய் மற்றும் அவருடைய குழுவினரால் அப்துல் கலாமின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டது. அந்த சிலை 25 கிலோ மெழுகால் தயாரிக்கப்பட்டது. கலாமின் குடும்பத்தினர் அந்த சிலையை கலாம் அறிவு மையத்தில் வைப்பதற்காக அதை தங்களுக்கு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் அந்த மெழுகு சிலையை ராமேசுவரத்துக்கு அனுப்பி இருக்கிறோம் என்றார்.