சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம்.தமிழீழமே கார்மேகம் சூழ்ந்த கறுப்பான கொடிய கூட்டுப்படுகொலை நாள். அன்றோடு நின்றுவிட்டதா இனப்படுகொலை? இல்லை இன்றும் சத்தமின்றி தொடர்கிறது…நிழலாக…
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய இனவழிப்பு மற்றும் இன்றும் எமது தாயகம் மீது சிங்கள பயங்கரவாத அரசு முன்னெடுக்கும் நிலப்பறிப்பு, ராணுவமயமாக்கல் ,கலாச்சார அழிப்பு எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.
ஆகவே, எஸன் (Essen), பிரன்க்பொர்ட் (Frankfurt), ஹன்னொவெர் (Hannover), பெர்லின் (Berlin) ஆகிய நகரங்களில் 23./24.07 அன்று யேர்மன் நாட்டின் மக்கள் மத்தியில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைபற்றிய விழிப்புணர்வை எம்மினம் நீதி பெற யேர்மன் வாழ் தமிழ் இளையோர்கள் முன்னெடுத்தார்கள்.
போராட்டத்திற்கான தேவைகள் இருக்கும்வரை போராட்டங்கள் முற்றுப்பெறுவதில்லை.
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி