உள்ளுராட்சி சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் 335 உள்ளுராட்சி சபைகள் காணப்படும் நிலையில், புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின்படி அவை 336 ஆக உயர்த்தப்படவுள்ளன.
இந்த நிலையில் பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை மற்றும் மாகாணசபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 486 இல் இருந்து 8 ஆயிரத்து 825 ஆக உயர்த்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உள்ளுராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2200 ஆக அதிகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.