மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக இன்று பிற்பகல் கண்டி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் சைட்டம் எதிர்ப்பு மக்கள் எழுச்சி இயக்கத்தினரும் இந்த போராட்டத்தை நடத்தினர்.
மாணவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னால் இருந்து பேரணியாக கண்டி நகருக்கு சென்று, அங்கு டயர் எரித்து போராட்டத்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்தல் மற்றும் குறித்து மருத்துவக் கல்லூரியை தடைவிதித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சைட்டம் எதிர்ப்பு மக்கள் எழுச்சி இயக்கத்தினர் இந்த போராட்டத்தை நடத்தினர்.
இதில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.