முல்லைத்தீவு தனியார் பேருந்து செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

300 0

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்  இன்று மேற்கொள்ளப்பட்டுகின்ற பணிப்புறக்கணிப்பின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட போக்குவரத்து  செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்இந்த கொலை முயற்சி தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையிலீடுபட்டுள்ளன.

Leave a comment