சுதந்திரக் கட்சி ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் பசிலுடன் இரகசிய சந்திப்பு

250 0

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

அந்தச் சந்திப்பில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஐவரும், பிரதியமைச்சர்கள் இருவரும் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கம்பஹா பிரதேசத்தில் வைத்தே, இந்தச் சந்திப்பு மிகவும் இரகசியமான இடமொன்றில், கடந்த வாரத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.

தாங்கள் ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்களும் , செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திலிருந்து விலகபோவதாகவும், அதற்கான காரணங்களையும் இந்தச் சந்திப்புகளின்போது தெளிவுப்படுத்தியதாக அறியமுடிகின்றது.

அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைக்க, அந்த ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தை தயாரிப்பது தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

ஜனாதிபதிக்கு, கடிதத்தை அனுப்பி வைத்ததன் பின்னர், ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு, அந்த ஏழுபேரும் தீர்மானித்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.

Leave a comment