தனியார் போக்குவரத்து சங்கமும், முச்சக்கர வண்டிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பில்…………

253 0
யாழ்ப்பாணம், நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்து தனியார் போக்குவரத்து சங்கமும், முச்சக்கர வண்டிகள் சங்கமும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
 யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்று முன்தினம் நல்லூர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று தனியார் போக்குவரத்து சங்கமும், முச்சக்கர வண்டிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதன்காரணமாக யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் தனியார் போக்குவரத்து சேவைகளோ, முச்சக்கர வண்டி சேவைகளோ இடம்பெறவில்லை. இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் மட்டும் சேவையில் ஈடுபட்டுள்ளதனால் பொது மக்கள் பயணங்களை மேற்கொள்வதில் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதை காணமுடிகிறது.

Leave a comment