தெல்தெனிய – திகன பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றில் நீச்சல் தடாகத்தில் நீராடி கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது நண்பர்கள் சிலருடன் சுற்றுலா விடுதியொன்றுக்கு சென்று நிலையில், அங்கு நீச்சல் தடாகத்தில் நீராடி கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் ரஹதுன்கொட – ஹேவாஹெட்ட பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது மெனிக்கின்ன மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.