வடமராட்சியில் துப்பாக்கிச் சூடு;பொலிஸார் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு

293 0
யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸார் இருவரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம்  மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை ஏற்றிச் சென்றபோது, பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்டும் மீறிச்சென்றபோது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே, 24 வயதான யோகரசா தினேஸ் என்ற துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருந்த சம்பவத்திவ் பருத்தித்துறை பொலிசார் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்
இந்நிலையில் இந்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த பொலிசார் இருவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை சந்கே நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார்.

Leave a comment