இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 44 இளைஞர் கழகங்களை தெரிவுசெய்யும் வகையிலான நேர்முகத்தேர்வுகள் இன்று காலை முதல் மட்டக்களப்பில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமையகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன்,சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜெயசேகர்,கட்டிட திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி ஜெயராஜன்,மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் சசிகுமார் மற்றும் உதவி பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.நாளை வரை நடைபெறவுள்ள இந்த நேர்முகத்தேர்வில் 60க்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் நைரூஸ் தெரிவித்தார்.
இளைஞர்களினால் அவர்களின் கழகம் ஊடாக அவர்களின் பிரதேசங்களில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் ஒரு கழகத்திற்கு 75ஆயிரம் ரூபா நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்படவுள்ளதுடன் மேலதிக உழைப்பு மற்றும் நிதியை அந்த கழகங்கள் சேகரித்து ஒரு குறிப்பிட்ட அபிவிருத்தியை மேற்கொள்ளவுள்ளது.