அசம்பாவிதங்களை கண்டித்து நாளை போராட்டம்

253 0

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று (23) கூட்டப்பட்ட மத்திய சங்க கூட்டத்தில் ஏக மனதாக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஜூலை 25 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு பிரதானமாக மருத்துவ மாணவர்களின் தலைவர் ரயன் ஜெயலத்தின் கடத்தல் முயற்சியை கண்டித்தும் மற்றும் லஹிரு உட்பட ஏனைய கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அத்துடன், சயிட்டம் எதிர்ப்பு மக்கள் அரண் ஒழுங்கமைப்பில் நடைபெறும் நடைபவனியும் அதனை தொடர்ந்து உச்சி மாநாடும் கொழும்பில் நடைபெறும்.

எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும்.

டெங்கு நோயாளிகளுக்குரிய சேவைகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment